Duration 12:42

PALAMEDU ZALLIKKATTU PRAIZE DISTRIBUTE

9 watched
0
1
Published 2022/01/16

மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திமிரிய காளைகளை அடக்கிய காலத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். *ஜல்லிக்கட்டு போட்டி* மதுரை மாவட்டத்தில் தை மாதம் 1-ந் தேதியில் அவனியாபுரத்திலும், 2-ந் தேதி பாலமேட்டிலும், 3-ந் தேதி அலங்கநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசத்தி பெற்றதாகும். கொரோனா அதிக அளவில் பரவி வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்தது. இதன்தொடர்ச்சியாக பாலமேட்டில் மாவட்டம் நிர்வாகம் தெரிவித்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு திடலில் மாடுபிடி வீரர்கள், காளைகள் பாதுகாப்பிற்காக சுமார் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார்கள் பரப்பப்பட்டன. பார்வையாளர்கள் பகுதிக்குள் காளைகள் சென்று விடாதபடி கம்பியால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. போட்டியில் கலந்து கொள்வதற்காக 300 வீரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப் பட்டிருந்தது. இதுபோல் 700 காளைகளின் உரிமையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் இறங்குவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  நேற்று காலை சரியாக 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை  அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  *ஒத்துழைப்பு* ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் அனீஸ்சேகர் ஒலி பெருக்கி மூலம் கேட்டு கொண்டார். தொடர்ந்து அவர் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை வாசித்தார். அதனை மாடுவீரர்கள் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி. அன்பு, மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி,,மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி மகாலிங்க சாமி கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடபட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக முண்டி அடித்து பிடித்தனர்.  *திமிறிய காளைகள்* சில காளைகள், மாடு பிடிவீரர்களுக்கு சவால் விடும் வகையில் சீறிப் பாய்ந்தன. அவற்றை அடக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.  அதே போல் காளைகளுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் என்ற எண்ணத்தில் மாடு பிடிவீரர்களும் சீறி பாய்ந்த காளைகளை முண்டி அடித்து பிடித்தனர். அவை திமிறினாலும் அதனை அடக்கினர். அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும், அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும் செல்போன், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பட்டு சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில் போன்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.  *அறிவிப்பு* காளைகள் அவிழ்த்துவிடப்படும் போதெல்லாம் அவற்றின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். வாலை பிடிக்கக் கூடாது, 15 மீட்டர் தூரத்திற்குள் காளைகளை பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை விழா குழுவினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கொண்டே இருந்தனர். விதிமுறைகளை மீறிய மாடு பிடி வீரர்கள் உடனடியாக திடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். *25 பேர் காயம்* இதுபோல் காளைகள் முட்டி தாக்கியதில் 2 போலீஸ்காரர்கள், பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 25-ற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல் காயமடைந்த காளையர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வாடிவாசல் அருகே இருந்தனர். *2 ஆயிரம் போலீஸ்* மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் 6 மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பல்வேறு இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் வெளியூர் நபர்கள் வருவதை தடுக்கும் வகையில் பல இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். *மருத்துவ பரிசோதனை* ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள 729 காளைகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டது. அந்த  காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் நடராஜர் குமார், கூடுதல் இயக்குனர் திருவள்ளூர் ஆகியோர் தலைமையில் 10 மருத்துவ குழுவினர் பல்வேறு கட்ட பரிசோதனைகளை நடத்தி னார். பரிசோதனையில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் நாட்டு இன மாடுகளா?, உடல்நிலை உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா?, போதைப் பொருள் எதுவும் பயன்படுத்தி இருக்கிறதா?, முன் பதிவு செய்த ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்பது உள்ளிட்டவைகளை சரிபார்த்து தகுதியுள்ள காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினார் ....

Category

Show more

Comments - 0