Duration 4:27

ALAGARKOYIL VAIGUNDA EGADESI SORKKA VASAL OPEN

10 watched
0
0
Published 2022/01/15

மதுரை அழகர்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின் அனுமதியின்றி நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 5.40 மணியளவில் இன்று நடைபெற்றது. ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 3 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை பகல்பத்து இராப்பத்து வைபவங்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் கள்ளழகர் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சொர்க்கவாசல்திறப்பையொட்டி சுவாமி புறப்பாடு ஆகி ஆலயத்தில் உட்புறகாரத்தில் வலம் வந்து வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க சொர்க்காவசல் வழியாக கள்ளழகர் வந்து அங்குள்ள சயண மண்டபத்தை சுற்றி வலம் வந்து அங்கே எழுந்தருளினார். கொரோனா பரவல் காரணமாக ஆலயத்தில் பக்தர்களின் அனுமதியின்றி திருக்கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு விழா நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பன்னிருவாழ்வார்களால் மங்காளாசசனம் செய்யப்பட்ட நாலாயிர திவ்யபிரபந்தம் பாசுரங்கள் ஓதப்பட்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று முதல் ஆலயத்தில் இராப்பத்து விழா அடுத்த பத்து நாட்கள் நடைபெறுகின்றது.

Category

Show more

Comments - 0