Duration 2:52

காளைகளை பணமழையால் அலங்கரித்து பூஜித்த அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள்

10 watched
0
0
Published 2022/01/18

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவக்கமாக வலசை கிராம காளை, முனியாண்டி கோயில் காளை அருவி மலை காளை என 3 காளைகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வாடிவாசல் வழியாக கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி அழைத்து வந்த பாரம்பரிய நிகழ்வு புகழ் பெற்ற அழங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் தை 3. ம் நாள் நடைபெறுவதற்க்கு முக்கிய நிகழ்வாக கருதக்கூடிய முனியாண்டி கோயில் காளை வலசை கிராமத்து காளை மலை அருவி சாமி காளை ஆகிய மூன்று காளைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை வழிபாடு நடத்திய பின்னர் தான் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கமாக கிராம மக்கள் சம்பிராதயமாக கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசு நாளை 17ந் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து தை 3ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை இருந்த போதிலும் வழக்கம்போல பாரம்பரிய முறைப்படி 16 ந் தேதி கிராமங்கள் வழக்கப்படி வலசை கிராம காளை முனியாண்டி கோயில் காளை அருவி மலை சாமி காளை என மூன்று காளைகளுக்கும் அலங்காநல்லூர் முத்தாலம்மன் கோயிலில் காளைகளுக்கு விசேஷ அலங்காரங்களும் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன பின்னர் காளைகள் வாடிவாசல் வழியாக மூன்று காளைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கிராம மக்கள் ஒன்றுகூடி காளைகளுக்கு பணமாலை போட்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அழைத்து வந்தனர் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் மற்றும் கிராம கமிட்டியினர் பொதுமக்கள் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Category

Show more

Comments - 0